

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள வகுபபுகள் செயல்பட உள்ளது.
இமாசல பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் 27ந்தேதி பள்ளி கூடங்கள் திறக்கப்பட்டு, குறிப்பிட்ட வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு மாதத்தில் காங்ரா மாவட்டத்தில் 426 மாணவர்கள், 49 பள்ளி பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், பண்டிகை கால விடுமுறையாக அக்டோபர் 31ந்தேதி முதல் நவம்பர் 7ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கல்வி துறை தெரிவித்து உள்ளது.
