• Wed. Apr 17th, 2024

இங்கிலாந்தில் ஒரே நாளில் 90,418 பேருக்கு கொரோனா பாதிப்பு

Byமதி

Dec 19, 2021

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது. தற்போது அங்கு கொரோனா பரவல் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் அதிகபட்சமாக 90,418 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 125 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *