• Fri. Apr 26th, 2024

சமையல் குறிப்பு

Byகாயத்ரி

Jul 13, 2022

கோதுமை மாவு பரோட்டா

கோதுமை மாவு பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப், இடித்த பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், தண்ணீர் – 2 கப், உருக்கிய வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், நெய் – தேவைக்கு ஏற்ப.

கோதுமை மாவு பரோட்டா செய்முறை விளக்கம்: கோதுமை மாவு பரோட்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நன்கு இடித்து மசிய வைத்த பூண்டு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு மல்லி தழையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் போல் உப்பு சேர்த்து ரெண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

கோதுமை மாவு கன்சிஸ்டெண்சியில் இருக்க வேண்டும். இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணையை ஒரு தாளிப்பு கரண்டியில் போட்டு நன்கு உருக்கி கொள்ளுங்கள். இதையும் இந்த மாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். பேன் லேசான சூடாக இருக்கும் பொழுது ரெண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றி வேக விடுங்கள். தவா நன்கு சூடாகி இருக்கக் கூடாது. சூடான பின்பு நீங்கள் ஊற்றினால் மாவு உப்பி வராது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடுங்கள். ரெண்டு புறமும் லேசாக வெந்த பிறகு அடுப்பை மீடியம் ஃப்ளேமுக்கு கொண்டு வாருங்கள். இப்போது பரோட்டாவின் முனை பகுதிகளில் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சுற்றி சுற்றிவிட்டு அழுத்தம் கொடுத்து கொண்டே இருங்கள்.

அதே போல இருபுறமும் அவ்வபோது திருப்பி போட்டு விட்டு முனைப்பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது போல கரண்டியால் ஒற்றி எடுங்கள். இப்போது மாவு சப்பாத்தி போல நன்கு உப்பி வரும். உப்பி வரும் சமயத்தில் தேவையான அளவிற்கு நெய்யை விட்டு வேக விடுங்கள். இப்போது பொன்னிறமாக பரோட்டா போல வறுபட ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டியது தான். ரொம்பவே சூப்பரான டேஸ்டியான கோதுமை மாவு பரோட்டா ரெடி!

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *