• Fri. Apr 26th, 2024

சமையல் குறிப்பு

Byகாயத்ரி

Jul 14, 2022

விதவிதமான சூப் வகைகளில் இரும்பு சத்து நிறைந்துள்ள இந்த முருங்கைக்கீரை ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் ராணியாக விளங்கும் இந்த முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்தால் உடலில் ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நோய் தீரக்கூடிய சுலபமான வழியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவிற்கு, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – இரண்டு, இடித்த பூண்டு பல் – நான்கு, அதே அளவிற்கு இஞ்சி இடித்தது, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வர மிளகாய் – இரண்டு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்.

செய்முறை விளக்கம்:

முருங்கைக் கீரை சூப் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஜீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய் இரண்டை கிள்ளி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இடித்த பூண்டு பல், அதே அளவிற்கு இடித்த இஞ்சி ஆகியவற்றை சரிசமமாக சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். இவற்றின் வாசம் லேசாக மாற ஆரம்பித்ததும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளி ஓரளவுக்கு நன்கு மசிய வதங்கி வரும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெயுடன் ஓரளவுக்கு முருங்கைக் கீரை வெந்து வரும் போது மஞ்சள் தூள் போட்டு கலந்து விட வேண்டும்.

முருங்கைக்கீரை சிறிதளவு வெந்த பின்பு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். கீரை வெந்து திக்கான சூப் போல ஆகியதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு இந்த சூப்பை அப்படியே குடிக்கலாம் அல்லது வடிகட்டியும் நீங்கள் குடித்துக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்து இருந்தால் இதை அப்படியே சாப்பிடுங்கள். இல்லை என்றால் வடிகட்டி சூப் மட்டும் குடித்து விட்டு, மீதம் இருக்கும் சக்கையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும் இந்த முருங்கைக்கீரை ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்தது!நீங்களும் இதை செய்து பாருங்க

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *