• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Mar 24, 2022

கோதுமை ரவை அடை:

தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – 1 கப், கடலைப்பருப்பு – 1ஃ4 கப், துவரம்பருப்பு – 1ஃ4 கப், வரமிளகாய் – 5, சின்ன வெங்காயம் தோலுரித்து 5 லிருந்து 6, சோம்பு – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்தப் பொருட்கள் மட்டுமே போதும்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை தனியாக போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். கோதுமை ரவை 1ஃ2 மணி நேரம் ஊறினால் போதும். மற்றொரு பாத்திரத்தில் துவரம் பருப்பையும், கடலை பருப்பையும், வரமிளகாய் இந்த 3 பொருட்களை போட்டு 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்கள் எல்லாம் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்சி ஜாரில் முதலில் கோதுமை ரவையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும். இரண்டாவதாக மிக்ஸி ஜாரில் ஊற வைத்திருக்கும் பருப்பு வகைகளையும் மிளகாயையும் சேர்த்து இதனுடன் சோம்பு 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் இவைகளையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பருப்பு வகைகளை, அரைத்து வைத்திருக்கும் சம்பா ரவையோடு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த அடை மாவு இட்லி மாவு பதத்திற்கு கெட்டிப் பதத்தில் இருக்க வேண்டும். அடை ஊற்றுவதற்கு தயாராக இருக்கும் மாவில் தேவைப்பட்டால் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை சேர்த்து சுடலாம். முருங்கைக்கீரை இல்லாதவர்கள் கொத்தமல்லித்தழையை பொடியாக வெட்டி போட்டு அடை வார்க்கலாம். சூடான தோசைக்கல்லில் அடை மாவை ஒரு குழி கரண்டி அளவு எடுத்து ஊற்றி, இலேசாக குழிகரண்டிலேயே பரப்பிவிட வேண்டும். முடிந்தால் உங்களுடைய கையை ஈரத்தில் தொட்டு அந்த அடையை தோசைக்கல்லில் கொஞ்சம் மெலிதாக தட்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான அடை தயார். தேங்காய் சட்னி காரச் சட்னி அல்லது தக்காளி சட்னி இவைகளை வைத்து பரிமாறவும். நிறைவான உணவு கிடைத்த திருப்தியை உணரலாம்.