• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Dec 7, 2022

வாழைப்பூ கோலா:

தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாழைப்பூவை வேக வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறு மொறு டிபன் இது.