இடியாப்ப புலாவ்
தேவையானவை:
இடியாப்பம் – 6, வெங்காயம், தக்காளி, கிராம்பு – தலா 1, பட்டை – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாயை சேர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, இடியாப்பத்தை சிறிது சிறிதாக பிய்த்துப் போட்டு உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து கிளறி… கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் இடியாப்ப புலாவ் தயார்.