• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byadmin

Jun 21, 2022

கேரட் லஸ்ஸி:

தேவையான பொருட்கள்:
கெட்டித் தயிர் – 1 கப், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், கேரட் – 2, பால் – கால் கப், ஏலக்காய் பொடி – சிறிதளவு, பாதாம் பருப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் கேரட்டின் தோலை நீக்கி விட்டு, துண்டுக ளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை சிறு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரைத் திறந்து, மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மென்மையாக மீண்டும் அரைத்து, டம்ளரில் ஊற்றி, பாதாம் பருப்பை சீவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான கேரட் லஸ்ஸி தயார்.