• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சாலை விரிவாக்க பணிகள் மதுரை நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகள் ஆய்வு..,

ByPuthar Pandian P

Mar 6, 2026

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் இருந்து நிலக்கோட்டை அடுத்த குளத்துப்பட்டி பிரிவு வரை விரிவாக்க சாலையாக மாற்றும் பணிக்கு தமிழக அரசு ரூ55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனை தொடர்ந்து அம்மைய நாயக்கனூர் சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை பகுதியில் உள்ள சாலை ஓரங்கள் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும் சாலை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் பணிகள் மும்பரமாக நடக்கிறது.
சாலையில் ஆங்காங்கே ஓடை பாலம் கட்டும் பணி, சாலை விரிவு படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புதிய சாலை அமைக்கும் இடங்களில் அம்மையநாயக்கனூர் சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை குளத்துப்பட்டி வரை நடை பெற்றும் பணிகளை மதுரை நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு (அலகு) கோட்ட பொறியாளர் வரலட்சுமி , உதவி கோட்ட பொறியாளர் சாந்தினி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அவருகளுடன் வத்தலக்குண்டு நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் வி.சி.கே.ஆனந்த், கொடைரோடு உதவி பொறியாளர் சதீஸ்குமார் மற்றும் சாலை ஆய்வாளர் இப்ராகிம் உட்பட பலர் வந்து இருந்தனர்.