• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jun 19, 2022

கதம்ப சாதம்:
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1 கப், துவரம்பருப்பு – அரை கப், உப்பு – தேவைக்கு, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், திக்கான புளிக்கரைசல் – அரை கப், பூசணித்துண்டுகள் – கால் கப், மஞ்சள் பூசணித் துண்டுகள் – கால் கப், கத்தரிக்காய் துண்டுகள் – கால் கப், வாழைக்காய் துண்டுகள் – கால் கப், (மற்றபடி விருப்பப்பட்ட நாட்டுக்காய்கள்), ஊற வைத்து வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை இரண்டும் சேர்ந்தது – கால் கப், வெல்லம் துருவியது – 1 டேபிள் ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், தனியா – 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 6, தேங்காய்த்துருவல் – 8 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1ஃ2 டீஸ்பூன்.
செய்முறை :
பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 3 கப் நீர் விட்டு குழைய வேக விட்டு வைக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஒரு கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வேக விடவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் ஊற வைத்து வேக வைத்த கடலைகளைச் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியினையும் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து காய்கள் வெந்ததும் வெந்த அரிசி, பருப்பினைச் சேர்த்துக் கலக்கவும். அடுத்து தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். இப்போது சூப்பரான கதம்ப சாதம் தயார்.