வரகரசி பால் பொங்கல்!
தேவையானவை:
வரகரசி – 1 கப், பாசிப்பருப்பு – 100 கிராம், வெல்லம் – 100 கிராம், பால் – 3 கப், தேங்காய் துருவல் – அரை கப், நெய் – 2 கரண்டி, முந்திரி, திராட்சை – தேவையான அளவு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி – தலா 1 சிட்டிகை.
செய்முறை:
பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தில் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பால் கொதித்ததும், வரகரசி, பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, குழைய வேக விடவும். அடுப்பை தணலில் வைத்து, வெல்ல பாகை அதில் சேர்க்கவும். நெய், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும். முந்திரி, திராட்சை, ஏலம், ஜாதிக்காய்ப் பொடியை நெய்யில் வறுத்து, கலவையில் சேர்த்து இறக்கவும். சுவையான வரகரசி பால் பொங்கல் தயார்!