இந்தோனேசிய அரசின் முடிவால் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த சமையல் எண்ணைய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தோனேசியாவில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யக்கூடிய 5.5 கோடி டன் எண்ணெயில் 3.4 கோடி டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். இதனால் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் பாமாயில் விலை உயர்ந்தது.இந்தியாவில் பொட்ரோல் .டீசல் விலை உயர்ந்துள்ளதால் சமையல் எண்ணை விலை அதிகமாக உயர்ந்துவந்தது.இந்நிலையில் இந்தோனேசிய அரசின் முடிவின் காரணமாக பாதிப்பு அடைந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை விலக்கப்படுவதாக இந்தோனேஷியா அறிவித்துள்ளது. பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீங்கியதால் அதை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.குறிப்பாக இந்தியாவிலும் சமையல் எண்ணெய்விலை குறையவாய்ப்புள்ளது.
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு..
