• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Sep 1, 2022

சப்பாத்தி லட்டு:

தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 6 பொடித்த வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் நெய் - 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம் - 1 1ஃ2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1ஃ4 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்சர் ஜாரில் போட்டு அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் நெய், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கையால் பிசைந்து விட வேண்டும். சிறிது கலவையை எடுத்து, அதை இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்தையும் உருட்டினால், சப்பாத்தி லட்டு தயார். இந்த லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.