• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Sep 10, 2022

துவரம்பருப்பு தக்காளி சூப்:

தேவையான பொருட்கள்

தக்காளி – கால் கிலோ, வெங்காயம் - 150 கிராம், துவரம்பருப்பு – கால் ஆழாக்கு, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - அரைக்குழிக்கரண்டி கறிவேப்பிலை – 1கொத்து,  பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க:
தனியா – 1 கைப்பிடியளவு, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1ஃ2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:

மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை அரைத்து, தனியாக வையுங்கள். பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள். தக்காளியை, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயத்தைப் போட்டுத் தாளியுங்கள். இதில் தக்காளி, வேக வைத்து மசித்த பருப்புடன், நான்கு தம்ளர் தண்ணீர் விட்டுக்கொதிக்க விடுங்கள். கலவை நன்றாக கொதி வரும்போது, அரைத்த மசாலாக்களைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். அருமையான சுவையான துவரம்பருப்பு தக்காளி சூப் ரெடி.