• Mon. Apr 28th, 2025

உதகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை..,

ByG. Anbalagan

Apr 13, 2025

இதில் அதிமுக மற்றும் திமுக போஸ்டர்கள்மீது கண்டன போஸ்டர்கள் ஒட்டிச் சென்றது யார் என்று காவல் துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள்,வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது அமலில் உள்ளது.

இதற்கு எதிர்புத் தெரிவித்து வணிகர் சங்கம் சார்பில் ஏப்ரல் 2 ம் தேதி முழு அடைப்பு நடைபெற்ற நிலையில்,

தற்போது உதகை முழுவதும் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி மாவட்ட மலை வாழ்மக்கள் மக்கள், வணிகர்கள்,ஊர்பொது மக்கள் என முகவரி அச்சிடப்பட்டுள்ளது.