• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிறுநீர் டாக்டர்

முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளஏபிவிபி அமைப்பினரைசந்தித்த விவகாரத்தில், ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனையின் துறை தலைவர் டாக்டர். சுப்பையா சண்முகம் ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். ஆரம்பம் முதலே மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதுதான் காரணம் என கூறி மரணத்திற்கு நீதிக்கேட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில்சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் இந்த மரணம் தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு அமைத்திருக்கும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தடையை மீறி நுழைந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். பாஜக மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திரிபாதி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது காவல்துறை. பின்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போலீசார் சைதாப்பேட்டை 18 வது குற்றவியல் நீதிபதி சுப்பிரமணியன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட 32 பேரில் 3 சிறார்களைத் தவிர 29 பேறையும் வருகின்ற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவுவிட்டார்.

இந்நிலையில் இவர்களை சந்தித்த டாக்டர். சுப்பையா சண்முகம் தற்போது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ABVP தென்பாரத அமைப்பு செயலாளர் ஆர்.குமரேஷ், அகில பாரத அமைப்பு செயலாளர் ஆஷிஷ் சௌகான், அகில பாரத இணை அமைப்பு செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இன்று தமிழக ஆளுனர்-ஐ சந்தித்து மனு கொடுத்தனர்.