• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்..,

BySeenu

Mar 15, 2026

கோவை மாநகர் மாவட்டம், வெங்கிட்டாபுரம் பகுதி கழகம் சார்பில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெங்கிட்டாபுரம் பகுதி கழக பொறுப்பாளர் எம்.சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 44 வது வட்டக்கழக பொறுப்பாளர் பொன்ராஜ் நடராஜன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர் கல்பனா செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ்எம்.முருகன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஸ்ரீ சத்யா கோவை தங்கம், வர்த்தக அணி துணை அமைப்பாளர் அருண்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

100 கிரைண்டர், 4 மின்சார இரு சக்கர வாகனம், சில்வர் பாத்திரம், சேலை உள்ளிட்ட ரூ 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில், தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்மறை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியில், வட்டக்கழக பொறுப்பாளர் சம்பத் நன்றியுரையாற்றினார்.