
காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், 11 காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
