திருச்சி மாநகரப்பகுதிகளில் வணிகவளாகங்கள் மற்றும் பொது இடங்களில் நிறுத்திவைத்துச் செல்லும் வாகனங்கள் மாநகரங்களிலும் மற்றும் புறநகரில் பகுதிகளிலும் திருடுபோவது வாடிக்கையாகி வருகிறது. இதனிடையே திருச்சி சுப்ரமணியபுரம் ஜெய்லானியா தெரு, கோனார் தெரு, பாண்டியன்தெரு, இளங்கோ உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், சைக்கிள்கள் அடிக்கடி திருடுபோகும் சம்பவமும் தற்போது அரங்கேறி உள்ளது .
அந்தவகையில் ஜெய்லானியா தெரு மற்றும் பாண்டியன் தெரு பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலைஉயர்ந்த புல்லட் மற்றும் கேடிஎம் இருசக்கர வாகனங்களும், கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் சைக்கிளும் திருடுபோனது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தபோது, கல்லூரி மாணவர்கள் போன்ற 2 பேர் இரவில் முகத்தில் துணியை கட்டிய படி வந்ததாக தெரிய வந்தது. அப்பகுதியை நோட்டமிட்டு வீட்டின் முன்பு மூடியபடி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை திருடிச்செல்வது சிசிடிவி கேமரா வீடியோ ஆதாரங்களுடன் தெரியவந்தது .இது தொடர்பாக அப்பகுதி மக்கள் இன்று கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தொடரும் வாகனங்கள் திருட்டு – அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்
