சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் வாட்ச் 4 கிளாசிக் மாடல்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ்- கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் எக்சைனோஸ் டபிள்யூ920 5 நானோமீட்டர் பிராசஸர், ஒன் யு.ஐ. வாட்ச் 3 ஓ.எஸ். மற்றும் வியர் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வாட்ச்கள் முறையே 1.2 மற்றும் 1.4 இன்ச் அளவு திரை கொண்டிருக்கின்றன.
கேலக்ஸி வாட்ச் 4 மாடலில் அலுமினியம் கேஸ், டச் பெசல், கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேசிங், சுழலும் பெசல் உள்ளது. இவற்றில் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 20 எம்.எம். வாட்ச் ஸ்டிராப்கள் உள்ளன.
கேலக்ஸி வாட்ச் 4 40 எம்.எம். ப்ளூடூத் விலை ரூ. 23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 46 எம்.எம். எல்.டி.இ. ரூ. 39,999 என நிர்ணயம் செய்துள்ளனர். புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சாம்சங் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவற்றின் விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்
