• Sat. Apr 20th, 2024

தொடர் போராட்டம் வென்றது- நடத்துனர் ஜெகனுக்கு நீதி கிடைத்தது

கன்னியாகுமரிமாவட்டம் அரசுபோக்குவரத்து கழகம் ராணிதோட்டம் பணிமனை கிளை-2 மேலாளர் வேல்முருகன் அங்கு பணியாற்றும் நடத்துனர் ஜெகனிடம் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதை கலெக்டரிடம் புகார் கொடுத்தார் என்பதற்காக பணி இடைநீக்கம், பணி இடமாற்றம் என ஒருதலைபட்சமாக சாதியபாகுபாடு பார்த்து அதிகார துஸ்பிரோயகம் செய்து ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதோடு, தொடர்ச்சியாக தலித் பணியாளர்கள் மீது தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கும் குமரிமாவட்ட அரசு போக்குவரத்துகழக அதிகாரிகளை கண்டித்தும்,
குமரி மாவட்ட போக்குவரத்துக் கழகத்தில் தலித் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் ஏற்படுத்திக் கொடுக்க கோரியும்,அரசு பணத்தை விரயம் செய்து அது பத்திரிக்கை செய்தியாக வந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதோடு குமரிமாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் அஜித்குமாரை சலூன் வைத்து சிரைக்க போ என்று கூறி சாதி பெயரால் இழிவுபடுத்திய குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின் லிஸ்பென்சிங் மீது உடனடியாக தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க கோரியும்,5000 ரூபாய் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் கொலைமிரட்டல் விடுத்த ராணிதோட்டம் கிளை-2 பொறுப்பு மேலாளர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யகோரியும்,நடத்துனர் ஜெகன் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய கோரியும்,குற்றவாளிகள் தனது உறவினர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் குமரி மாவட்ட போக்குவரத்து துறை பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தியை கண்டித்தும்,தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக கடந்த 12-01-2023 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை 10 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து நடத்தியது.அதன்பின்பு தமிழக அரசும், காவல் துறையும், போக்குவரத்து துறையும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காததால் இரண்டாம் கட்டமாக 19-01-2023 அன்று காலை 9.30 முதல் மாலை 7.00 மணி வரை குமரி மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி 26.01.2023 குடியரசு தினவிழா அன்று குமரி மாவட்டம் முழுவதும் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை 30 நடத்துனருக்கு நீதி வழங்கண்ணில் கருப்பு துணி கட்டி, கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்த நிலையில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்காலிகமாக 10 நாட்கள் மட்டும் போராட்டம் நடத்துவதை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்தது.
ஆனால் இதுவரையில் குமரிமாவட்ட நிர்வாகமோ, குமரிமாவட்ட காவல்துறையோ, போக்குவரத்துதுறையோ கோரிக்கை மீது எந்தவித முதற்கட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே 09.02.2023 காலை 11:00 மணி முதல் மேற்படி கோரிக்கை மீது தீர்வு கிடைக்கும் வரை குமரிமாவட்ட போக்குவரத்துதுறை பொதுமேலாளர் அலுவலகம் ராணிதோட்டம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்துவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்து இன்று முதல் நடத்தி வருகிறது.நாகர்கோவில் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு.ராஜா அவர்கள் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்து போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் நாகர்கோவில் சரக டிஎஸ்பி பொறுப்பு திரு.ராஜா, குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி அரசு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் சுனில், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சட்ட ஆலோசகர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் நடத்துனர் ஜெகனின் குழித்துறை பணிமனை பணியிட மாற்றம் போக்குவரத்து துறை அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் உடனடியாக பணி கொடுப்பதாக குமரி மாவட்ட அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி கொடுத்த வாக்குறுதியை ஏற்று தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது நடத்துனர் ஜெகனுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *