• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகராட்சி லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ByKalamegam Viswanathan

Feb 10, 2023

மதுரை மாட்டுத்தாவணி அருகே சாலையில் சென்ற மாநகராட்சி லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு: போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு மதுரை மாநகராட்சி லாரி சென்று கொண்டிருந்தது.

வளர்நகர் அருகே சென்ற போது லாரியிலிருந்து திடீரென புகை கிளம்பியதால் ஓட்டுநர் லாரியிலிருந்து கீழே இறங்கி பார்த்தபோது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்து.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் லாரியில் ஏற்பட்ட தீயை போராடிக் கட்டுப்படுத்தினர்.தொடர்ந்து ஓட்டுனர் அளித்த தகவலின் அடிப்படையில் மாட்டுத்தாவணி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.