நடைபெற உள்ள விருதுநகர் கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை நகர கழகத்தின் தேர்தல் ஆணையாளாரக நியமிக்கப்பட்ட R.M.பழனியப்பன் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து ஆலோசித்தார்.

வரும் திங்கள் 13-12-21 அன்று நடைபெற உள்ள கழக அமைப்பு தேர்தலில் விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை நகர கழகத்திற்கு தலைமை கழகத்தால் தேர்தல் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் R.M.பழனியப்பன் இன்று விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரனை சந்தித்து ஆலோசனைகள் நடந்தது. இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
