ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவிதினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் டிடிவி தினகரன் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் , கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறி்ததும் இக்ககூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.