• Fri. Apr 26th, 2024

தமிழ் மொழி மந்திரங்கள் நிறைந்த மொழியாக -பேரூர் ஆதீனம் சிறப்பு பேட்டி!!!

ByS.Navinsanjai

Mar 10, 2023

தமிழ் மொழி மந்திரங்கள் நிறைந்த மொழியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது கோவில்களில் தமிழ் மொழி வழிபாடு குறித்து பல்லடத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்பு பேட்டி!!!
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கரூர் சென்று விட்டு பல்லடம் வழியே கோவை திரும்பும் வழியில் பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது இந்து கோவில்களில் தமிழ் மொழி வழிபாடு குறித்த கூறுகையில் தமிழ் மொழி மந்திரங்கள் நிறைந்த மொழியாக திகழ்கிறது. காரைக்கால் அம்மையார் அருளிய தமிழ் வழி பாடல்களை கோவில்களில் ஓதி கடவுளை எழுந்தருளி செய்து வழிபாடு செய்து வருகிறார்கள். அறிவியல் நிகழ்வை குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழகம் முழுவதும் சென்று பரப்பி வந்தார். கோவையிலே முதல் முறையாக 1954 ஆம் ஆண்டு தமிழிலே குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவை சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்பூர் நீலகிரி ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் தமிழிலே குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


பல்லடத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக தமிழில் கோயில்களில் வழிபாடு நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு பெருவிழா நடைபெற்ற போது சமஸ்கிருதத்தில் நன்னீராட்டு பெருவிழா நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்கள் தமிழிலே பாடினார்கள். ஆனால் வேள்வி தமிழில் நடத்தப்படவில்லை. அதேபோல கரூரிலே சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்து அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளை இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டு இருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு கருத்து கேட்க அறிவுறுத்தினார்கள் எந்த மொழியிலே வழிபாடு செய்ய வேண்டும் என்று அமைக்கப்பட்ட குழு அல்ல தமிழிலே எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட குழு தான் அது சென்னை திருநெல்வேலி கோவை திருச்சி மதுரை ஐந்து இடங்களுக்கும் நேரடியாக சென்று அங்குள்ள குழுக்களிடம் கருத்து கேட்டு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை சேகரித்து தொகுத்து பகுத்து அதனை இந்து சமய அறநிலை துறைக்கு அனுப்பி வைத்து பின்னர் அது குறித்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உரிய சட்டமாக இயற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *