• Sat. Apr 26th, 2025

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்..,

ByK Kaliraj

Apr 6, 2025

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் சிவகாசி மாநகராட்சி சிவகாசி கிழக்கு பகுதி கழகம் சார்பாக,
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான.கழக நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம் பூத்எண்:193,194,195,196,197,198,199,200,204 உட்பட்ட பகுதிகளுக்கு.
சிவகாசி காரனேஷன் காலனி மாஸ் மினி மஹாலில் நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும் ,விருதுநகர் மாவட்ட மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார்.
கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர், பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கபட்டது.

அம்மா பேரவை துணைச் செயலாளர் கணேசன், கிழக்குப் பகுதி கழகச் செயலாளர் அர்ஜுன் சாம் , உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.