• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்..,

Byமுகமதி

Apr 8, 2026

திருமயம் அருகே காரியாபட்டியில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என திருச்சி ஆர். விஸ்வநாதன் தலைமையிலான தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த அனைவரும் ஆதரவளிப்பது தேர்தல் பணியாற்றுவது வாக்கு சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி ஐயா ஆர் வி அவரது புதல்வன் திரைப்பட நடிகர் பரதனுக்கு ஒதுக்கப்பட்டது.

என் டி ஏ கூட்டணியில் உள்ள அனைவரும் பரதனை வெற்றி பெறச் செய்ய உழைப்பதை போல திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ வைரமுத்து அவர்களுக்கு தேர்தல் பணியாற்றுவது என்ற அடிப்படையில் திருமயத்தை அடுத்துள்ள காரியாபட்டியில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வேட்பாளர் வைரமுத்து அவர்களின் புதல்வன் குமாரசாமியும் வந்திருந்தார். அதன்படி தொகுதி முழுவதும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் திண்ணைப் பிரச்சாரம் செய்வது, பெண்கள் வாக்குகள் மட்டுமல்லாது இளைஞர்கள் இளம் பெண்களின் புதிய வாக்குகளையும் பெற்று அவர்களை அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வைப்பது போன்ற பணிகளை இரவு பகலாக மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஆலவயல் மாணிக்கம் அம்பலம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். சுந்தர்ராஜ், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வடகாடு அருள், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் கருப்பையா, திருமயம் தொகுதி அமைப்பாளர் ஆலவயல் மா. பழனிச்சாமி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் சு. ராஜேந்திரன், திருமயம் ஒன்றியத் தலைவர் வெள்ளைச்சாமி, பொன்னமராவதி ஒன்றிய தலைவர் அடைக்கன், ஆகியோருடன் சிங்கத்தமிழர் முன்னேற்ற சங்கத்தின் இளைஞர்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.