• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் கட்டிடத் தொழிலாளி குத்திக் கொலை!!

BySeenu

Jul 8, 2025

கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள பாரில் மது குடித்து உள்ளனர்.

அப்பொழுது ஜெயக்குமாருக்கும், மது குடிக்க வந்த வெளி நபர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கலைந்து சென்று விட்டனர். பின்னர் நள்ளிரவில் மீண்டும் மது குடிக்க வந்த போது அங்கு ஏற்கனவே தகராறு செய்த இரண்டு பேரும் இருந்தனர். அப்பொழுது மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் அவருடைய நண்பரும் அங்கு இருந்து சென்று தனியார் கல்லூரி அருகே ஒரு பேக்கரி அருகே நின்று கொண்டு இருந்தனர்.

அப்பொழுது தகராறு செய்தவர்களை காரில் பின்தொடர்ந்து வந்தவர், வந்து மீண்டும் ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களில் ஒருவர் கத்தியால் ஜெயக்குமாரின் கழுத்தில் சராமரியாக குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். படுகாயம் அடைந்த ஜெயக்குமார் அக்கம், பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஜெயக்குமார் கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார். இந்த படுகொலை பற்றி தகவல் அறிந்ததும் மதுக்கரை காவல்துறை விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். காரின் பதிவு எண் அடிப்படையிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் ஜெயக்குமாரை, கத்தியால் குத்தி கொலை செய்ததாக தஞ்சாவூர் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த முகமத் ஹாரூன் கைது செய்யப்பட்டார். தற்பொழுது கோவை ஆத்துப்பாலம் பகுதியில் வசித்து வரும் இவர், சொந்தமாக கால் டாக்ஸி வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குறிச்சி பகுதி சேர்ந்த விக்கி என்ற விக்ரமன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தம் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.