• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

‘கனெக்ட்’ படம் தோல்வி – நயன்தாரா அறிக்கை

கனெக்ட்’ படத்தை பார்த்து ஆதரவளித்த திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி ..நயன்தாரா அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய காதல் கணவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்து, இந்த வருட துவக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.நயன் நடிப்பில்… அவருடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன், தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான ஹாரர் படமான ‘கனெக்ட்’ பப்படமாகி தோல்வி படமாகி போனது இந்த நிலையில்நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ளஅறிக்கையில்
இந்த ஆண்டு எனக்கு ஒரு நிறைவான ஆண்டாகும்’. கனெக்ட் படத்தை பார்த்து ஆதரவளித்த திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. தொடர்ந்து நீங்கள் டிக்கெட் முன் பதிவு செய்து படத்தை ரசித்து வருவதற்கு நன்றி.
எங்களால் முடிந்தவரை ரசிகர்கள் மனதை நிறைவு செய்ய முயற்சித்துள்ளோம். எங்கள் படக்குழு அனைவருமே நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் இயக்குனரான அஸ்வின் சரவணன் என்னை நம்பியதற்கு நன்றி. உலகம் தரம் வாய்ந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது அன்பு நிறைந்த தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனுக்கு நன்றி இந்த அறிக்கையை பார்த்த திரையரங்கு உரிமையாளர்கள் ஓடாத ஒரு படத்திற்கு இப்படி ஒரு பில்டப்பா என அதிர்ச்சியடைந்துள்ளனர்