சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி காட்டப்படும். அரசியல் ரீதியாக ராகுலை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி, இந்திய ஜனநாயகத்தை சிதைத்துவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.