• Mon. Apr 29th, 2024

குமரி மலைவாழ் மக்களின் இல்லங்களில் மின்சார ஒளி விளக்கு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே மலைவாழ் கிராமத்திற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சோலார் மின் இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். ஒரு மாதத்தில் 100சதவீத மின் இணைப்பை எட்டி ,மின் இணைப்பில் 100சதவீத இலக்கை குமரி மாவட்டம் அடையும் எனவும், மாவட்ட ஆட்சியர் பேட்டி..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 மலைகிராமங்களில் ஆதிமலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலையோர கிராமங்களுக்கு பல வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் பெரும்பாலான மலைகிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி மின் இணைப்புகள் வழங்கபட்டது. அதே நேரத்தில் பேச்சிப்பாறை அணையில் மேல்பகுதியில் அமைந்துள்ள மலைகிராமங்களான மாறாமலை, களப்பாறை, புன்னமுட்டுதேரி, உட்பட பல கிராமங்களுக்கு மின்இணைப்பு வழங்கமுடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இதை நிவர்த்தி செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகம் ,வனத்துறை மின்சாரத்துறை, வருவாய்துறை ஆகிய துறைகள் இணைந்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகளும் குழு கலைந்துரையாடல் நடத்தி இந்த கிராமக்களுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் இணைப்பு வழங்க முடியாது என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் இந்த மலைகிராமங்களுக்கு சோலார் மின் இணைப்பு வழங்க பரிந்துரை செய்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் இந்த மலைகிராமங்களுக்கு சோலார் மின் இணைப்பு பொருத்தபட்டு அதன் செயல்பாடை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ,துவக்கி வைத்தார்.

முன்னதாக பேச்சிப்பாறை சீரோபாயின்ட் பகுதியிலிருந்து அணைநீர்படிப்பு பகுதியில் சுமார் 1மணிநேரம் படகில் ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பயணம் செய்ததுடன் இந்த மலைகிராமத்திற்கு நீண்ட தூரம் நடத்து சென்று மலைவாழ்மக்களுடன் கலைந்துரையாடினர். இது குறித்து ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவிக்கையில் மலை கிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி மின் இணைப்பு கொண்டு செல்லமுடியாத கிராமங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சோலார் மின் இணைப்பு வழங்கபட்டிருப்பதாகவும் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மலைகிராமங்களுக்கு மினு இணைப்பு மற்றும் சோலார் இணைப்புகள் வழக்கபட்டுள்ளது இன்னும் 50க்கு குறைவான வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கவேண்டியுள்ளது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மீதமுள்ள கிராமங்களில் சோலார் இணைப்புகள் பொருத்தபடும் இதன்மூலம் 100சதவீத மின் நிறைவு தன்னிறைவுபடும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *