• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

100 நாட்களில் 100% சாதனையை செய்து காட்டிய மாணவர்களுக்கு பாராட்டு..,

Byமுகமதி

Feb 22, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானி புரசகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாட்களில் 100 சதவீத சாதனை நிகழ்வை மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கூ. அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து ஆய்வு செய்த நிகழ்வு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது .

2024 டிசம்பரில் டி.புதுார் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களின் திறனைப் பார்த்த மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கில வாசிப்பு மற்றும் அடிப்படைக் கணிதத் திறனை மேம்படுத்த, தொடக்கக் கல்வித் துறை 100 நாள் சவால் திட்டத்தை (2024-25 கல்வியாண்டு தொடர்ச்சி) செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 14,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிப்ரவரி 2026-ல் தொடங்கி 100 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக திறன்கள் சோதிக்கப்படுகின்றன. 2025-26 கல்வி ஆண்டிலும் இத் திட்டம் தொடர்கிறது.
தொடக்க நிலை மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறன்களான தமிழ், ஆங்கில வாசிப்பு மற்றும் அடிப்படைக் கணிதத்தை (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) வலுப்படுத்துதல். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5 வகுப்பு பயிலும் திறனை 100 நாட்களுக்குத் தொடர்ந்து கண்காணித்து, வாசிப்புப் பழக்கம் மற்றும் கற்றல் அடைவு ஆகிய பயிற்சிகளை வழங்கி 100 நாள் பயிற்சி முடிவில் பொது வெளியில் மாணவர்களின் திறன்கள் சோதிக்கப்படுகின்றன.

அவ்வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நாட்டானி புரசகுடி தொடக்க பள்ளியில் பயிலக்கூடிய 21 மாணவர்களும் தமிழ் ,ஆங்கிலம் கணிதம் ஆகிய மூன்று பாடங்களிலும் எழுத படிக்க எளிய கணக்குகளை தங்கு தடையின்றி செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம் எங்களை ஆய்வு செய்து அனைத்து திறன்களும் பெற்ற முதன்மை பள்ளியாக அறிவியுங்கள் என்று விடுத்த சவாலை ஏற்று மதிப்புமிகு முதன்மை கல்வி அலுவலர் திரு கூ. சண்முகம் அவர்கள் தலைமை தாங்கிட மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கலாராணி உதவி திட்ட அலுவலர் திரு செந்தில் வட்டார கல்வி அலுவலர் திரு நடராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு பார்த்திபன் திரு ஆனந்தன் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன கல்லூரி விரிவுரையாளர் திரு சங்கரன் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி சாலை செந்தில் பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு .மாரிமுத்து திரு இளையராஜா ஆகியோர் முன்னிலையில் திறன் சோதித்தறியப்பட்டது.

இச்சாதனையை தம் பள்ளியில் நிகழ்த்தி காட்டிய பள்ளியின் தலைமை திரு சபரி கிரிஸ் அவர்களை ஊர் பொதுமக்கள் கூடி பாராட்டுகின்ற நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேற்கண்ட ஆய்வில் 100 நாட்களில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை உறுதி செய்து பள்ளி நிர்வாகத்திற்கும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொது மக்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை மேலும் அதிகரிக்க மாணவர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக பள்ளி கருகாமையில் அமைந்துள்ள சாலையை செப்பனிட்டு கொடுத்தால் இன்னும் கூடுதலாக மாணவர்கள் கிடைப்பார்கள் என்ற கோரிக்கை தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு அவ்விடத்திலேயே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக அதை நிறைவேற்ற ஆவண செய்யப்பட்டும் என உறுதி அளித்தனர்.
கற்றல் கற்பித்தல் திறன்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும்
மென்மேலும் சிறக்க வழிகாட்டப்பட்டது.