மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் டேனியல் விஜயராஜ், மதுரை கீழடியில் பிறந்தவர், கடந்த 1984 முதல் 1986 வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பள்ளிப்படிப்பு முடித்து மதுரை மற்றும் பல்வேறு இடங்களில் முதுகலை படிப்பு படித்து முடித்தவர். லண்டன் அரசு மருத்துவமனையில் சிறந்த சேவையாற்றியதற்கு மருத்துவ சேவையின் தரக்கூடிய நைட்டிங்கேல் விருது, சென்ற ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, இன்று மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தாளாளர் அருள்தந்தை ஸ்டீபன் பிரகாசம் வரவேற்று அறிமுக உரையாற்றினார். தலைமையாசிரியர் தந்தையை சேவியர் ராஜ் வாழ்த்துரை வழங்க, பள்ளியின் முன்னாள் மாணவரான நைட்டிங்கேல் விருது பெற்ற டேனியில் விஜயராஜ்-க்கு மாணவர்கள் முன்னிலையில் பாராட்டு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
டேனியல் விஜயராஜ், பேட்டியளிக்கையில் மருத்துவ துறையில் சிறந்து விளங்கியதற்காக தரக்கூடிய நைட்டிங்கேல் விருது பெற்றதற்கு மகிழ்ச்சி அடைவதாகவும் தான் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் என்ற முறையில் நடக்கும் பாராட்டு மகிழ்ச்சியாக உள்ளது. நான் பெற்ற விருதால் வரக்கூடிய நாட்களில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்க இந்த விருது எனக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருவதாக தெரிவித்தார். பாராட்டு விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.