• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

கீழடி அருங்காட்சியகத்தில் .. செல்ஃபி எடுத்து முதல்வர் நெகிழ்ச்சி!

ByA.Tamilselvan

Mar 6, 2023

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அருங்காட்சியகத்தை திறந்துவைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு செல்பி எடுத்துக்கொண்டார்.
’கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள வளர்ச்சி பணிகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.18.43 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் மரபுசார் கட்டிடக்கலை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார் இதனைத்தொடர்ந்து அங்கு நின்று தனது செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.