• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்..,

ByG.Suresh

Jul 5, 2025

மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருநாவுக்கரசு இவ்வாறு கூறினார்.

மேலும், என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் அது உயிரிழப்புக்கு ஈடாகாது,
மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான செயல்களில் காவல்துறையில் இருக்கக்கூடிய ஒரு சிலர் ஈடுபடுகின்றனர் என்று கூறிய திருநாவுக்கரசர், தமிழக அரசு தனிப்படையை கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். அரசை பொருத்தவரை இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்,குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள் என்றவர். எவ்வளவுதான் நிவாரணம் கொடுத்தாலும் தாய்க்கு தன் மகனின்இழப்பு தாங்க முடியாத பேரிழப்பாகும் என்று கூறினார்.

காவல்துறையில் மேலதிகாரிகள் இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவதில்லை மாறாக, கீழ் மட்டத்தில் உள்ள காவலர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தவர், விசாரணையின் போது மனிதாபிமானமாக நடந்து கொள்வதற்கான பயிற்சியை காவலர்களுக்கு வழங்க வேண்டும். கொலைக்காக கொடுக்கப்படும் நஷ்ட ஈடு பரிகாரமாகாது என்றும் கூறினார். கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்து வருவதாக கூறியவர்.

அதற்காக அரசை குற்றம் சொல்ல தேவையில்லை என்றும், அடியாள் வேலை பார்ப்பதற்காகத்தான் போலீசார் பணிபுரிகிறார்களா? அதற்காகத்தான் சம்பளம் பெறுகிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்பினார். அஜித் குமார் கொலை சம்பவத்தில் தேவையான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளார்.
ஆனால்,இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. ஒரு உயிரிழப்பிற்கு 200 கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்றவர்,
நிகிதா பொய்யாக புகார் கொடுத்திருந்தால் அவர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையை கேட்டுக்கொண்டார்.