
காவல்துறையினர் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு நடக்காமல் விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.
மடப்புரத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி.
மருத்துவ அறிக்கையின் வாயிலாக காவலர்களின் அத்துமீறலை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். மடப்புரத்தில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காவல்துறை அத்திமீறி உள்ளது.

அதிமுக மீட்பு குழுவின் சார்பில் நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறை தட்டி கேட்காததால் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வந்துள்ளது.
இந்த சூழ்நிலை மாற வேண்டும். இல்லை என்றால் திமுக மிகப்பெரிய சரிவை சந்திக்கும். திறமையாக வாதாடி தவறு செய்தவர்கள் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைமா என்பதை சொல்வதற்கு
நான் ஒன்றும் ஜோசியர் அல்ல. ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் உரிமைகளை காப்பாற்றிக் கொளள நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்திய கூட்டணியின் ஒரு அங்கமாகத்தான் நான் தொடர்ந்து செயல் கொண்டிருக்கின்றேன். விஜய் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே விஜய் பற்றிய கருத்தை நான் சொல்லி இருக்கிறேன். இப்பொழுதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது கொள்கை கோட்பாடு எதை நோக்கி செல்கிறது என்பதை வைத்துத்தான் கருத்து சொல்ல முடியும்.
