நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி சென்ற
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ராகுல் காந்தி மற்றும்
கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான டெல்லி போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தி கைது செய்ததை கண்டித்தும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருப்பு பேட்ச் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்மோகன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் கண்டன உரையாற்றினார்.
முன்னிலை சாத்தூர் கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா மேற்கு வட்டாரத் தலைவர் கார்த்திக் வட்டார பொறுப்பாளர் சன் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.

கலந்து கொண்டவர்கள் சாத்தூர் வெம்பக்கோட்டை வட்டாரத் நிர்வாகிகள் செல்வக்கனி சுப்புராம் கிருஷ்ணசாமி காளியப்பன் மற்றும் சாத்தூர் நகர துணைத் தலைவர் சேதுராமலிங்கம் சின்னப்பன் வெள்ளைச்சாமி மண்டல நிர்வாகிகள் மேட்டுப்பட்டி மகேந்திரன் சிந்தப்பள்ளி சுப்பையா வீரப்பன் முள்ளி சேவல் கருத்துத்துறை குப்பத்தூர் பரத்ராஜ் சடையம்பட்டி மாரிமுத்து சத்திரப்பட்டி லட்சுமணன் மாரிக்கண்ணன் ராஜரத்தினம் பாலசுப்பிரமணியன் ராஜா மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.





