• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் தென்காசி வட்டார நூலகத்திற்கு வழங்கப்பட்ட கணினிகள்

தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்திற்கு கணிப்பொறி வழங்கல்
தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தின் வளர்ச்சி, போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி, இலவச போட்டி தேர்வு அளித்து வருவது, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டியாக இருந்து வருவதை அறிந்த தென்காசி வல்லம் தொழில்அதிபர் (திமுக) பாலகிருஷ்ணன் ரூ60000- மதிப்பிலான இரண்டு கணிப்பொறிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பொ.சிவபத்மநாபன் தலைமையில் வழங்கினார். நகரசெயலாளர் சாதிர், ஆடிட்டர் ஆர்.நாராயணன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்கள். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், இளமுருகன், ரா.கோமதிநாயகம் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 2000 பேர்களுக்கு உறுப்பினராக சேர்வதற்கான திட்டத்தில் ஆடிட்டர் நாராயணன் 300 உறுப்பினர்களுக்கான தொகையும், வழங்கினார். கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்கள்.