• Wed. Feb 12th, 2025

மின்கசிவால் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் நிதி உதவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவன் கோட்டையை சேர்ந்த அருள்-வனிதா ஆகியோரது மகன் சக்தி என்ற 12 வயது சிறுவன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கன மழையின் காரணமாக வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சம்பவம் பற்றிய தகவல் அறிந்த தெற்குமாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவியாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கினார். அப்போது ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி சுபாஷ் சந்திரபோஸ், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், குருவன்கோட்டை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.