இணையதளங்களில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை குறிவைத்து தவறான தகவல்கள் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பும் வகையில் சிலர் செயல்படுகின்றனர் என்று கூறி, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ செந்தில்நாதன் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவில், X ட்விட்டர்) மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் @DMKITwing எனும் கணக்கின் மூலம் திட்டமிட்டு அவதூறாக தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதன் மூலம் பழனிசாமி அவர்களின் நற் பெயர்களை கெடுக்கும் நோக்கத்துடன் செயல்படப்படுவதாகவும், இந்த அவதூறு செயலில் திரு. TRB ராஜா மற்றும் சில இளைஞர் அணியினரும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷிஸ் ராவத்திடம் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று மனு அளித்தனர்.