சிவகங்கை மாவட்டம் இளையன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் மாணவியர்கள் விடுதி இங்கு சுமார் சொல்வதற்கு மேற்பட்ட மாணவிகள் இந்த விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விடுதியில் உள்ள நிறை குறைகளை கேட்டறிந்தார். இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்த இடத்தில் ஆய்வு செய்து தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என விடுதி பாதுகாப்பாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாணவிகளும் மாவட்ட ஆட்சியர் கூறும் அறிவுரைகளை கேட்டு அதை நடைமுறை படுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.