• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஜனநாயகன் படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு…,

ByP.Thangapandi

Apr 14, 2026

தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும், மே 4 ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்ற சூழலில் அதிமுக திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில்,

கடந்த இரு தினங்களுக்கு முன்பு எச்.வினோத் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ஜனநாயகன்., இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி என்பவர் நகர் காவல் ஆய்வாளர் சுரேந்தர குமார் – ரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்த படக்காட்சி எடுக்கப்பட்டுள்ளது. படக்காட்சி ஆரம்பிக்கும் போது பாப்பாபட்டி கிராமத்தில் ஜாதி பிரச்சனை காரணமாக மூன்றாவது தேர்தலை புறக்கணித்தாகவும் அதன் பின்பு காவல் அதிகாரி கிராம மக்களை பார்த்து ஓட்டு போட அழைத்ததாகவும் அதற்கு அந்தக் காட்சியில் நடித்தவர்கள் தேர்தலில் ஓட்டு போடவர்களை கைகளை வெட்டியதாகவும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது அடித்ததாகவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் உண்மைக்கு புறம்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே ஜனநாயகன் படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.