சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்
ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.பெரியசாமி, கே.நாகராஜ், பி.சங்கபிள்ளை, மூத்த நிர்வாகி எம்.ஆர்.முத்துச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.




