• Tue. Dec 10th, 2024

பயிற்சி திறன்களின் தொகுப்பு புத்தகம் வெளியீடு

BySeenu

Nov 13, 2024

கோவை ஜெம் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான மருத்துவமனை செய்முறை பயிற்சி திறன்களின் தொகுப்பு புத்தகம் வெளியீடு

கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான மருத்துவமனை செய்முறை பயிற்சி திறன்களின் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பேராசிரியர்கள் லிஸி ரவீந்திரன், மஞ்சுளா, டெபோரா பாக்கியஜோதி அனீஸ் ஆகியோரால் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் இந்திய செவிலியர் குழுமம் தயாரித்துள்ள செவிலிய மாணவரின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் செவிலியர்களின் அனைத்து செயல்முறை பயிற்சிகளும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடுதல் செய்முறை பயிற்சிகளின் OSCE Checklist ம் செய்முறை தேர்வு கேள்விகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் செய்முறை தேர்வுக்கு ஆயத்தம் செய்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் எனவும் மொழி நடை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த புத்தகம் மருத்துவ படிப்பு முடியும் வரையிலும் படிப்பு முடிந்த பிறகு செவிலியராக பணியாற்றும் பொழுதும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, ஆர் வி எஸ். கல்வி குழுமம் செயலாளர் சாரம்மா சாமுவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் ஜென் மருத்துவமனை CEO பிரவீன் ராஜ் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து புத்தகம் வெளியிடப்பட்டது.