• Tue. Dec 10th, 2024

ஆடை, ஆபரணங்களுக்கான சிறப்பு கண்காட்சி

BySeenu

Nov 12, 2024

25வது பதிப்பான ஸ்டைல் பஜார் எனும் தலைப்பில் ஆடை, ஆபரணங்களுக்கான சிறப்பு கண்காட்சி தொடங்கின.

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தாஜ் விவாண்டா ஹோட்டலில் 25வது பதிப்பான ஸ்டைல் பஜார் எனும் தலைப்பில் ஆடை, ஆபரணங்களுக்கான சிறப்பு கண்காட்சி தொடங்கியது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த சிறப்பு கண்காட்சியினை மார்ட்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக செல்வராணி சந்திரன், சந்தோஷி ராஜேஷ், நிவேதிதா ராமசாமி, திவ்யா ராபீந்திரன், துளிக்கா, நீலேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கர்நாடகா, பூனே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த விற்பனையாளர்கள் கண்காட்சியில் அரங்குகளை அமைத்திருந்தனர். இதில் புதுமையான ஆடைகள், நகைகள், திருமண உடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ரூபாய் ஆயிரத்திலிருந்து கிடைக்கின்றன. 50க்கும் மேற்பட்ட அறைகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை காண வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்.