• Fri. May 17th, 2024

பட்டியலின பெண் மீது தாக்குதல் – உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Feb 1, 2024

பட்டியலின பெண் மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியது மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை கருப்பாயூரணியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா கூறுகையில் “நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெப்பக்குளத்தில் மின் விளக்குகள் அமைத்து கொடுத்தற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டியதாக சு.வெங்கடேசன் குறிப்பிட்டு உள்ளார், 5 ஆண்டுகளில் மின் விளக்கை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என செல்லூர் ராஜூ சூசகமாக குறிப்பிட்டதை எம்.பி பொது வெளியில் பாராட்டியதாக குறிப்பிட்டு உள்ளார், ஜெயலலிதா காலத்தில் இருந்து எதிர்க்கட்சிகளோடு அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது, செல்லூர் ராஜு வெள்ளந்தி மனதுடன் பாராட்டியதை சு.வெங்கடேசன் மனதுக்குள் வைத்திருக்க வேண்டும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என நினைத்து செல்லூர் ராஜு பேசியுள்ளார், ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகை அல்ல சாக்கடை என மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர், மதுரை மக்களுக்கு சு.வெங்கடேசன் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை, மக்கள் நல போராட்டங்களிலும் பங்கேற்கவில்லை, தமிழை சொல்லி சு.வெங்கடேசன் வியாபாரம் செய்து வருகிறார், திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எம்ஜிஆர் விமர்சனம் செய்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆ.ராசா மதுரை பக்கம் வந்தால் நடமாட விட மாட்டோம், எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என கூறினார். போராட்டத்தின் பொழுது கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்சேரி கணேசன்,சட்டமன்ற உறுப்பினர் பெறியபுள்ளான், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் வக்கில் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன்,மேலூர் ஒன்றிய சேர்மன் பொன்னுச்சாமி, அவைத்தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் பொன் ராஜேந்திரன், வெற்றிசெழியன், குலோத்துங்கன் பொருளாளர் அம்பலம் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கொட்டாம்பட்டி ஒன்றிய அ ம மூ க ஒன்றிய அணிசெயலாளளர் பிச்சை தலைமையில் 50 க் மேற்பட்டோர் ADMK இணைத்துக்கொண்டார். அனைவரையும் ராஜன் செல்லப்பா பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *