• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனூர் ஊராட்சியில் குடிநீர் இன்றி அவதிப்படும் பொது மக்கள்

ByKalamegam Viswanathan

Dec 24, 2023

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் கடந்த 15 நாட்களாக குடிக்கவும் தண்ணீர் இல்லை, குளிக்கவும் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் உள்ளது தேனூர் ஊராட்சி. இங்கே 12 வார்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த வீ.டி.பாலு என்பவரும், துணைத் தலைவராக பாக்கியலட்சுமி என்பவரும், ஊராட்சி செயலாளராக ஸ்ரீதர் என்பவரும் உள்ளனர்.
வைகை ஆற்றங்கரையில் இருந்து கொண்டு தேனூர் ஊராட்சி மக்கள் தண்ணீருக்காக மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் தோண்டிய போது, உடைப்பு காரணமாக கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் குளிக்கவும் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தேனூர் ஊராட்சி 3வது வார்டில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி இயங்கவில்லை. மேலும் 1960 ஆண்டில் கட்டப்பட்ட குடிநீர் டேங்க் பின்புறம் உள்ள பெண்கள் குளிக்கும் அறையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படவில்லை. தேனூர் ஊராட்சி மேலக்கால் ரோட்டில் உள்ள ஆண்கள் குளியலறையும் வேலை செய்யவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. வைகை ஆற்றங்கரையில் இருந்து கொண்டு தண்ணீருக்காக தேனூர் கிராம மக்கள் படும் அவஸ்தைகள் மிக அதிகமாக உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தேனூர் ஊராட்சியில் குடிநீர் வழங்கிடவும், ஆண்கள், பெண்கள் குளியலறையை சரி செய்து, பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்டிகளை முழுமையாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.