• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அடுத்தடுத்து 4 மாஸ் ஹீரோக்களுடன் கமிட்டான கிங்ஸ்லி!.

Byமதி

Oct 15, 2021

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் டாக்டர். கொரோனா தளர்வுகளுக்கு பின் மக்கள் குடும்பமாக இந்த படத்தை காண திரையரங்குகளுக்கு வருவதை பார்க்கமுடிகிறது.

டாக்டர் படத்தில் யோகி பாபு, குக் வித் கோமாளி தீபா என பல பிரபலங்கள் நடித்திருந்தாலும், படம் முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நபர் என்றால் அது ரெடின் கிங்ஸ்லி தான். படம் பார்த்த அனைவருமே இவரின் நடிப்பை தான் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், கிங்ஸ்லி நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாக உள்ளதும். அதில் இரண்டு படங்கள் பிரம்மாண்ட ஹீரோக்களின் படங்களாகும். அந்த வரிசையில் டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் வெளியாக உள்ள படம் என்றால், அண்ணாத்த படம் தான். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதில் ரெடின் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

தொடர்ந்து நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல ஆகிய படங்களில் ரெடின் தான் காமெடியனாக நடித்துள்ளாராம். இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. எனவே இவர் தமிழ் சினிமாவில் சத்தம் இல்லாமல் வளர்ந்து வரும் காமெடி நடிகராக உள்ளார்.