• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆசியாவின் முதல் பெண்கள் படையின் தளபதி-லட்சுமி சாகல்

ByAlaguraja Palanichamy

Jul 1, 2022

ஆசியாவின் முதல் பெண்கள் படைக்கு தளபதியாக இருந்த மற்க்ககூடாத வீரபெண்மணி லட்சுமிசாகல்.விடுதலை போராட்டவீரர்.நேதாஜி படையின் பெண் கேப்டன் என பல பெருமைகள் மிக்க பெண்மணி.
சுதந்திர போராட்ட தியாகியும், சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் முக்கிய அங்கம் வகித்தவருமான லட்சுமி சுவாமிநாதன், 1914-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி சுவாமிநாதன்–அம்மு இருவருக்கும் மகளாகப் பிறந்தார். சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். இவரின் தாய் அம்மு சுவாமிநாதன், கேரளா மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம் பெற்றிருந்தன.
லட்சுமி ஒன்பதாம் வகுப்பில் பயிலும் போதே, மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். ஆங்கில மிஷனரி பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றும், அங்கு மருத்துவக் கல்விக்குத் தேவையான பாடங்கள் செம்மையாகப் போதிக்கப்படவில்லை என்பதால், லேடி லிவிங்ஸ்டன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் 1930-ல், கல்லூரி படிப்பை, இராணி மேரி கல்லூரியில் தொடர்ந்தார். 1938-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.

1942–ல் இங்கிலாந்து–ஜப்பான் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார். 1943 –ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ‘ஜான்சி ராணி படை’யைத் தொடங்கினார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது.

இராணி மேரி கல்லூரியில் பயிலும் போது, கதர் மட்டுமே அணியும் தீவிர காங்கிரஸ் இளைஞர் அணியில் உறுப்பினரானார். பகத்சிங் வழக்குக்காக, கல்லூரியில் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அதே 1930–ம் ஆண்டில் அறப்போராட்ட மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார்.

அக்காலத்தில் ‘கவிக்குயில்’ என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடுவின் உடன்பிறந்தவரான சுகாசினி நம்பியார், மீரட் சதி வழக்கில் தொடர்பு கொண்டவராகக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். அவர், லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். பொதுவுடைமைவாதியான அவரிடமிருந்து, லட்சுமி மார்க்சிய தத்துவம் பற்றியும் ரஷியப் புரட்சி பற்றியும், மற்றும் பல நூல்களையும் வாங்கிப் படித்தார்.

சோசலிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி, பெண்களின் ஆளுமை ஆகிய கொள்கைகளில் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியுடன் போராடியவர் லட்சுமி சாகல்.
சினிமா
இந்திய தேசிய ராணுவத்தையும், அதில் பங்கேற்ற வீராங்கனைகளையும் கவுரவிக்கும் வகையில், ‘தி ஃபர்காட்டன் ஆர்மி’ (‘The forgotten Army’) என்ற படம் அமேசான் பிரைம் விடியோ வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

‘சமுதாய மாற்றம் புரட்சியினால் தான் சாத்தியமாகும்’ என்ற கருத்து ஆழமாக அவர் மனதில் இடம் பெற்றது. அத்தகைய ஓர் ஆயுதப் புரட்சியே அரசியல் விடுதலைக்கு உகந்ததாகும் என்று அவர் நம்பலானார். ஏற்கனவே, தனது தாயைப் பின்பற்றிக் காந்தியின் அகிம்சைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டிருந்த லட்சுமி, மேலும் அதில் ஈடுபடாமல் தனது மருத்துவக் கல்வியை முடித்தார்.

1939–40-களில் இரண்டாம் உலகப் போர் மூண்டபோது தீவிரக் கதர் இயக்கங்களில் ஈடுபட்டோர்களும், அகிம்சை வழியில் ஈடுபட்டோர்களின் வாரிசுகளும், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்தியாவின் போர் சேவைக்காக இராணுவத்தில் பணி செய்ய லட்சுமியின் மனது இசையவில்லை.

லட்சுமியின் தாயாரும், தங்கையும் அமெரிக்காவில் இருந்தனர். தனது தந்தையையும் அவர், 1930–ல் இழக்க நேரிட்டது. சென்னையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வாழ்வைக் கழித்து வந்த லட்சுமி, தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவர் என்ற நிலையில் உதவி செய்ய, 1940-ல் சிங்கப்பூர் சென்றார். எளிய தென்னிந்திய தொழிலாளப் பெண்கள் நிறைந்த அந்தச் சூழலில், நல்ல இந்தியப் பெண் மருத்துவர் இல்லை என்பதை அவர் கண்டார். அங்கேயே தங்கி தன் மருத்துவ சேவையில் ஈடுபடலானார். சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனையும் தொடங்கினார். வெகு விரைவிலேயே ஒரு நல்ல மருத்துவர் என அவர் புகழ்பெற்றார்.

1943 ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் கேப்டன் லட்சுமி. இவர் 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்டஅந்த இந்திய தேசிய இராணுவத்தில் பிறகு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். (இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது.
இவர் அக்டோபர் 24, 19140-ல் அந்தகல மதராஸ் மாகாணத்தில் பிறந்த இவர் அடிப்படையில் ஒரு மருத்துர், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியில் படித்தார்

மருத்துவரான லட்சுமி சாகல் 1943 ஆம் ஆண்டு நேத்தாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 1947-ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, ஆங்கிலேயப் படையில் இருந்து பின்னர், இந்திய தேசிய இராணுவத்தில் அருந்தொண்டாற்றிய தன்னுடைய சகபோராளி தளபதி பிரேம் சாகல் என்பவரை லட்சுமி மணந்து கொண்டார். பிறகு கான்பூரில் குடியேறினார்.

நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர் இவர். 1971 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்) கட்சியில் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது இவருக்குக் கிடைத்தது (2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்)

ஜூலை 23 ஆம் தேதி அன்று கான்பூர் மருத்துவமனையில் மாரடைப்பினால் காலமானார்.

வசதியான குடும்பத்தில் பிறந்து, மருத்துவ பட்டப்படிப்பை பெற்ற லட்சுமி சாகல் பொது சேவை செய்ய வேண்டும் என்றில்லை; எனினும், தானே முன்வந்து பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டார். இந்நாளில் இந்த வீரப் பெண்மணியை சற்றே நினைத்துப் பார்ப்போம். வாழ்க பாரதம்!

சமுக சிந்தனையாளர்,
புவியியல், பேராசிரியர். முதுமுனைவர்.

அழகுராஜா பழனிச்சாமி
நிலத்தடி நீர் ஆய்வளர்