• Sat. Oct 12th, 2024

36 வருட தவம்.! – லோகேஷ் ட்வீட்!

லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து “விக்ரம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், நந்தினி, ஷிவானி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். அதற்கு நெகிழ்ச்சியில், கமலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு அதில் “36 வருட தவம் எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *